Wednesday, December 10, 2014

BOBEU CIR:2013-15/22 dated 10.12.2014:

BOBEU/2013-15/22                                                                                                        10-12-2014        

 தோழர்களே
¨        நமது சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் – நெல்லை
¨        தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் 22வது மாநில மாநாடு – திருச்சி
¨        அகில இந்திய மகளிர் வங்கிப் பணியாளர் மாநாடு – மும்பை
¨        நமது வங்கியில் வீட்டு வசதிக் கடன் தொகை உயர்வு

நமது சங்க மாநில செயற்குழுக் கூட்டம்  – நெல்லை :

நமது சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் கடந்த 16-11-2014ம் நாளன்று முதன்முறையாக திருநெல்வேலி நகரில் சிறப்புற நிகழ்ந்தது.  மாநிலம் முழுவதிலுமிருந்து 75ம்  மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தினை நெல்லை-தூத்துக்குடி மாவட்ட வங்கி ஊழியர் சங்கப் பொதுச்செயலாளர் தோழர் ரெங்கன் அவர்கள் துவக்கி வைத்தார். நமது செயற்குழுவினை வாழ்த்தி தமிழ்நாடு பிராந்திய துணைப் பொது மேலாளர் திரு V முருகன் அவர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். 

கடந்த ஈரோடு செயற்குழுவிற்குப்பின் நடைபெற்ற நமது சங்க செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் நமது சங்கப் பொதுச் செயலாளரால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. பத்தாவது இருதரப்பு ஒப்பந்தப் போராட்டங்கள், தொழிலாளர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய சட்டத்திருத்தங்களைக் கொண்டுவரும் மத்திய அரசின் முயற்சிகள், மற்றும் நமது வங்கியில் நம்முன் உள்ள பிரச்சினைகள் குறித்து புதிதாக சங்கத்தில் இணைந்துள்ள இளம் தோழர்கள் உட்பட 23 தோழர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர். கடந்த ஆறு மாத காலத்தில் நமது சங்கத்தில் புதிதாக இணைந்த சுமார் 83 தோழர்களை செயற்குழு பாராட்டியது.

மேலும் விரைவில் மதுரையை தலைமையிடமாகக் கொண்டு அமையவுள்ள புதிய பிராந்தியத்தில் நமது சங்கத்தினை மேலும் வலுப்பெறச்செய்ய, சங்கப் பொறுப்பாளர்களை செயற்குழு நியமித்தது. அடுத்த மாதம் திருச்சியில் நடைபெறவுள்ள தமிழ் நாடு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநில மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் நமது தோழர்கள் பெருமளவில் கலந்துகொள்ள செயற்குழு முடிவுசெய்தது. 

கடந்த மாதம் நெல்லை கிளையிலிருந்து ஓய்வு பெற்ற நமது உறுப்பினர்கள் தோழர் மீரான்ஜி மற்றும் தோழர் S சுகுமாரன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து பாராட்டப்பெற்றனர். மேலும் செயற்குழுவினை  தோழர்கள் S G அந்தோணி அமல்ராஜ், C ராமலிங்கம், M K M தாஹிர் தலைமையில் வெற்றிகரமாக நடத்திய நெல்லைத் தோழர்களை செயற்குழு பாராட்டியது

செயற்குழுவிற்கு முதல்நாளன்று நமது சங்கப்பொதுச்செயலாளருடன், தோழர்கள் S மீனாஷிசுப்ரமணியன் (தலைவர்), D C சுப்பிரமணி, A ஸ்ரீநிகராஜன் (துணைத்தலைவர்கள்), N ஜெகதீஸ்வரன் (பொருளாளர்), V அசோக்வரதராஜன் (இணைச் செயலாளர்), M சக்திவேல் மற்றும் மணிகண்டன் (செயற்குழு உறுப்பினர்கள்) ஆகியோர், மதுரை மத்திய கிளை, பொன்மேனி, சொக்கிகுளம், அண்ணா நகர் மற்றும் மதுரை SME  கிளைகளுக்குச் சென்று நமது தோழர்களைச் சந்தித்தனர்.

தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் 22வது மாநில மாநாடு – திருச்சி :

தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் 22வது மாநில மாநாடு திருச்சி மாநகரில், வரும் டிசம்பர் 27/28/29ம் நாட்களில் நடைபெறுகிறது. இம்மாநாட்டின் வரவேற்புக் குழுவில் நமது சங்கத்தின் இணைச்செயலாளர் தோழர் S கோவிந்தராஜன் மற்றும் தோழர் சம்பத்குமார் (மணச்சநல்லூர் கிளை) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் 27-12-2014 அன்று காலை 10 மணிக்கு, மாநாட்டின் பிரதிநிதிகள் அரங்கினை அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் செயலாளர் தோழர் B S ராம்பாபு துவக்கிவைக்கிறார். அன்று மாலை சிறப்பு கருத்தரங்கம் நடைபெறுகிறது. 

மறு நாள் 28-12-2014 காலை 10-00 மணிக்கு மாநாட்டினை AITUC பொதுச் செயலாளர் தோழர் குருதாஸ் தாஸ்குப்தா அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரை நிகழ்த்துகிறார்.  அன்றைய தினம் பிற்பகலில், சிறப்பு இளைஞர் விவாதம், தற்காலிக ஊழியர் குறித்த கருத்தரங்கம் மற்றும் சிறப்பு மகளிர் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

கீழ்க்கண்ட நிகழ்ச்சிகளுக்கு அனைத்து தோழர்களும் அனுமதிக்கப்படுவார்கள்:

27-12-2014   SATURDAY - மாலை நிகழவுள்ள சிறப்புக் கருத்தரங்கம்
28-12-2014   SUNDAY       -காலை தோழர் குருதாஸ் தாஸ்குப்தா அவர்களின் துவக்க உரை நிகழ்ச்சிகள்
28-12-2015   SUNDAY       -மாலை நிகழவுள்ள சிறப்பு மகளிர் மாநாடு

மேற்கண்ட பொது நிகழ்ச்சிகளில் திருச்சி மற்றும் அருகாமையிலுள்ள கிளைத்தோழர்கள் பெருவாரியாக கலந்துகொண்டு பயனுற வேண்டுகிறோம்.

    
அகில இந்திய மகளிர் வங்கிப் பணியாளர் மாநாடு – மும்பை :

அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் ஏழாவது அகில இந்திய மகளிர் மாநாடு வரும் டிசம்பர் 19/20/21 நாட்களில் மும்பை நகரில் நடைபெறுகிறது.  சுமார் 600 மகளிருக்குமேல் கலந்துகொள்ளும் இம்மாநாட்டில் Malaysia, Srilanka, Nepal, Bangladesh, Philippines மற்றும் World Federation of Trade Unions (WFTU) ஆகிய நாடுகளில் செயல்படும் வங்கி  ஊழியர் அமைப்புகளிலிருந்து மகளிர் சிறப்பு பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். நமது சங்கத்தின் பிரதிநிதியாக இணைச்செயலாளர் தோழர் ரேணுகா, இம்மாநாட்டில் கலந்துகொள்கிறார்.


நமது வங்கியில் வீட்டு வசதிக் கடன் தொகை உயர்வு :

பத்தாவது இருதரப்பு ஒப்பந்த கோரிக்கைகளில் ஒன்றாக, ஊழியர்களின் வீட்டு வசதிக் கடன் தொகையினை அதிகப்படுத்த  வேண்டி வைக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று, நமது வங்கி, கீழ்க் கண்டவாறு வீட்டு வசதிக் கடன் தொகையினை அதிகரித்துள்ளது.


             LIMIT
        RATE OF INTEREST
அதிகாரிகள்-SCALE VI & SCLAE VII
         -80- லட்சம்
UPTO    Rs 40 LACS -7 % SIMPLE INT
ABOVE Rs 40 LACS - 8% SIMPLE INT
அதிகாரிகள் - SCLAE I TO SCLAE V
-60- லட்சம்
எழுத்தர்கள்
-35-லட்சம்
      -7 -% SIMPLE INT
கடைநிலை ஊழியர்கள்
-20-லட்சம்

மொத்த சம்பளத்தின் -95- மடங்கினை கடனாக பெற்றுக்கொள்ளலாம். திருப்பிச் செலுத்தல் - அசல் 270 மாதங்கள் மற்றும் வட்டி - 90 மாதங்கள் . 

தோழமையுடன்,

(கோ ரவிகோபால்)
பொதுச் செயலாளர்