Tuesday, May 6, 2014

கடனை செலுத்தாத 400 பெரிய நிறுவனங்களின் பட்டியல் - அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் வெளியிட்டது..

கடனை செலுத்தாத நிறுவனங்களின் பட்டியல்: அகில இந்திய வங்கி   ஊழியர் சங்கம் வெளியிட்டது

வங்கிகளுக்கு தரவேண்டிய கடன் தொகையை செலுத்தாத 406 நிறுவனங்களின் பட்டியலை அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ளது. 
சென்னையில் அச்சங்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுடனான சந்திப்பு நடைபெற்றது. அப்போது இதுகுறித்து பேசிய அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம், 

கடனை திருப்ப செலுத்தாதவர்களின் முழுமையான பட்டியல் விரைவில் வெளியிடப்படும். இந்த நிறுவனங்கள் சுமார் 70 ஆயிரத்து 300 கோடி ரூபாய் பணத்தை வங்கிகளுக்கு திருப்பி செலுத்தாமல் உள்ளது. பெரு நிறுவனங்கள் தான் கடனை திருப்பி செலுத்தாமல் உள்ளது. அவற்றை திரும்பப் பெற மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடனை திருப்பி செலுத்தாத நிறுவனங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
சாதாரண மக்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்தவில்லை என்றால் கெடுபிடி செய்யும் அரசாங்கம், மிகப்பெரிய செல்வந்தர்கள், மிகப் பெரிய நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
நன்றி : நக்கீரன் செய்தி - 06-05-2014